கோசை நகரான் தொல்லிசைக் கருவியகம்

( இருபத்து நான்கு மணி நேர இசைக்கருவிகள் கண்காட்சி )

  • ❖ இக்கருவியகம் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகைகளில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகளை வகைப்படுத்தி ,அதனை காட்சிப்படுத்தி அதனை பற்றின பல தகவல்களை தமிழர்களுக்கு எடுத்துரைக்கும் பண்பாட்டு மையமாக அமைக்கபட்டுள்ளது.

  • ❖ தமிழ்நாட்டில் பழுது அடைந்து ஏதேனும் கருவிகள் இருந்தால், அவை எந்த வகைக் கருவியாக இருந்தாலும் எப்படிப்பட்ட கருவியாக இருந்தாலும் அதன் பழுது நீக்கி அக்கருவி இசைக்கும் அளவிற்கு சரி செய்துக் கொடுக்கப்படும். தமிழர்களின் விட்டிலோ (அ) ஊரிலோ (அ) கோவில்களிலோ பயன்படாத இசைக்கருவிகள் (அ) பயன்படுத்த படாத இசைக் கருவிகள் இருந்தால் அதனை மீட்டெடுத்து இசைக்கருவிப் பற்றின விழிப்புணர்வுகளை ஏற்படுத்த பயன்படுத்தப்படும்.இக்கருவியகத்தில் உள்ள இசைக்கருவிகள் அனைத்தும் தங்களது ஊர் எங்கிருந்தாலும் குமரி முதல் இமயம் வரை (அ) அனைத்து நாடுகளிலும் உள்ள கல்லூரிகள் ,பள்ளிகளில் கண்காட்சிக்கு உட்படுத்தப்பட்டு அதைப் பற்றின விழிப்புணர்வு செய்யலாம்.
Pe-Aristi Projects And Engineering Pvt.Ltd

இக்கருவியகத்தின் செயல்பாடுகள்

நம் தமிழ்நாட்டின் பண்பாட்டு பாரம்பரிய இசைக்கருவிகளைப் பற்றின விழிப்புணர்வை இளைய தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். பாரம்பரிய இசைக்கருவிகளை கண்டறிந்து ,ஆய்வு செய்து அதனைப் பற்றிய சான்றுகளை பதிவு செய்தல் வேண்டும். உலகத்தின் எந்த ஊராக இருந்தாலும் அங்கு இந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்தி கண்காட்சி நடத்த வேண்டும். இதனால் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் இசைக்கருவிப் பற்றின விழிப்புணர்வு செய்யப்பட வேண்டும். இசைக்கலைஞர்கள் எந்த வகையான இசைக்கருவியை கொடுத்தாலும் , அதன் பழுது நீக்கி இசைக்கக்கூடிய அளவிற்கு சரி செய்து கொடுக்கப்படும் . தோற்கருவிகள் எவ்வளவு பெரிய இசைக்கருவியாக இருந்தாலும், எந்த கருவியாக இருந்தாலும் தோல் கட்டப்பட்டுக் கொடுக்கப்படும் ( இதனால் நெகிழி கருவி அழிக்கப்படும் )
அனைத்து இசைக்கருவிகளும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு புதிய இசைக்கருவிகளாக உருவாக்கப்பட்டு வழங்கப்படும். நமது பாரம்பரிய இசைமேளங்களும், ஆட்டங்களும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் , இசை நிகழ்வுகளிலும் , பண்பாட்டு நிகழ்வுகளிலும், தமிழர்களின் வழிபட்டு சடங்குகளிலும் பயன்படுத்த வழிவகை செய்ய ஏற்பாடு செய்வோம்.
இக்கருவியகம் தமிழர்களின் வாழ்வியல் சடங்குகளான தொட்டிலிட்டு குழந்தைக்குப் பெயரிடல் ,மகவுக்கு உணவூட்டல் , குருத்துமுடி கழித்தலும் காதணி விழாவும் ,எழுத்தறிவித்தல் ,சிவதீக்கை ,மஞ்சள் நீராட்டுவிழா, திருமண உறுதி, தமிழ்முறைத் திருமணம் ,வளைகாப்பு ,புதுமனைப் புகுவிழா ,மணி விழா ,பவள விழா ,முத்து விழா ,வைர விழா , உயிர் புறப்பாடு ,திருவடிப்பேறு, கல்நிறுவல் ஆண்டுத்திதி (நினைவு வழிபாடு) போன்ற நிகழ்வுகளையும் ,கடைத்திறப்பு விழா ,குடமுழக்கு விழா, வருட அபிஷேக விழா ஆகியன அனைத்து நிகழ்வுகளும் செந்தமிழ் வேதமாம் திருமுறைகள் ஓதி செய்ய ஏற்பாடு செய்துத்தரப்படும். இதனால் தமிழ் அனைத்து வீடுகளிலும் வீடு வீடாக எடுத்துச் செல்லப்பட்டு தமிழின் ஆற்றலை வெளிப்படுத்துவோம்.